இன்று மத்திய பட்ஜெட் பிரகாசமான நட்சத்திரமாக இந்திய பொருளாதாரம் விளங்குகிறது- பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

by Staff / 01-02-2023 11:41:41am
இன்று மத்திய பட்ஜெட் பிரகாசமான நட்சத்திரமாக இந்திய பொருளாதாரம் விளங்குகிறது- பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே 2023-2024ம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 5வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இது.அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை தாங்கியபடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசு மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட் கோப்புகளை அவரிடம் காண்பித்து  அனுமதி பெற்றார்.பின்னர் நாடாளுமன்றம் சென்ற நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இது பெரும் பொருளாதார சக்தியாக விளங்கும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைவிட அதிகம் எனக் கூறினார். இந்திய பொருளாதாரத்தை பிரகாசமான நட்சத்திரமாக உலக நாடுகள் பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் சிறந்த எதிர்காலம் இந்தியாவிற்கு இருப்பதாகவும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

Tags :

Share via