செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென விழுந்த மேற்கூரை

by Editor / 23-08-2021 02:20:04pm
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென விழுந்த மேற்கூரை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குடும்ப கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. மேலும் அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த வார்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை வேறு வார்டுக்கு நிர்வாகிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்ததால் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளதாக நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் நிர்வாகத்தின் சார்பில் மேற்கூரையை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via