தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் திமுக கொடிக்கம்பங்கள் அகற்றம்.
தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து இன்று காலை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் இதன் தொடர்ச்சியாக அனுமதி பெறாமல் அவரை வரவேற்று சாலை ஓரத்திலும்,மேம் பாலத்தின் டிவைடர் மீது கிளிப் பொருத்தி வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பங்களை காவல்துறையினர் அகற்றிவருகின்றனர்.மேலும் குத்துக்கல்வலசையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 35 அடி உயரமுள்ள இரும்பு பைப்பில் கட்டப்பட்ட கொடிக்கம்பம் அந்த வழியாக சென்ற விவேக் குமார் என்பவரது கார் மீது நேற்று இரவு விழுந்ததில் கார் சேதம் கார் உரிமையாளர் விவேக் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீனாட்சி சுந்தரம், பிரபு, ஆகிய இரண்டு நபர்கள் மீது தென்காசி போலீசார் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு. மேலும் தேர்தல் கண்காணிப்பு குழு கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கொடிக்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் இரும்பு பைப்பிலான கொடிக்கம்பங்களை சாலை ஓரத்திலும்,மேம்பாலத்தின் மீதும் பொருத்தியிருந்த நிலையில் அவற்றை அதிகாரிகள் குழுவினர் அகற்றிவருகின்றனர்.
Tags : தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் திமுக கொடிக்கம்பங்கள் அகற்றம்.