பாஜகவினர் வெடிவைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் ; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.
நாகப்பட்டிணம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்க பாஜகவினர் வைத்த வெடியால் பக்கிரிசாமி மற்றும் சுப்ரமணியன் ஆகியோரின் கூரை வீடுகள் எரிந்து நாசமானது.இந்த நிலையில் பாஜகவினர் மீது வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஒரு வழக்கும், கிராம நிர்வாக அலுவலர் வீரமணி கொடுத்த புகாரில் ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த தம்பிதுரை பூங்கா அருகே அமைந்துள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்
Tags : பாஜகவினர் வெடிவைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் ; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு



















