கல்குவாரி விபத்து-டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை.

நெல்லைமாவட்டம் நாங்குநேரி அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் மரணம் அடைந்து ஒரு வாரமாகியும் தீர்வுகாண மறுப்பது ஏன் என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியினுடைய நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நாங்குநேரி அருகே உள்ள அடை மிதிப்பான் குளம் கல்குவாரி ஏற்பட்ட விபத்தில் செல்வம், ஆயன்குளம் முருகன், , செல்வகுமார்,ஆகிய 3 பேர் இறந்தும். விஜய், முருகன் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டும் உடையான் குடியிருப்பு ராஜேந்திரன் மீட்க முடியாமல் ஒரு வார காலம் ஆகியும் அந்த கோர விபத்தில் இறந்தவர்கள் காயம்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு உரிய நியாயம் வழங்காமல் அரசியல் தலையீட்டால் மாநில அரசு கால விரயம் செய்வதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாநில அரசு இறந்தவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் அவர்கள் வலியுறுத்திய ஒரு கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும், சட்டவிரோதமாக இந்த குவாரி இயங்குவதற்கு காரணமாக இருந்த ஒரே ஒரு அதிகாரியை மட்டும் கண்துடைப்பாக இடைநீக்கம் செய்து ஏமாற்றாமல் கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட, மாநில அளவிலான சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களில் கோரிக்கைகளுக்கு விரைந்து அரசு செவிசாய்க்க வில்லை எனில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரும் 23 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அந்த அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளார்.
Tags : Calcutta Accident-Dr. Krishnasamy Report.