8வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

by Editor / 29-07-2021 02:24:34pm
8வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்


பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கையில் வைத்திருந்த கோப்புகளை கிழித்தும் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.மேலும்  காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், 8-வது நாளாக வியாழக்கிழமை  செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தில்  வெடித்தது. மக்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை 11.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதேபோல், எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் நணபகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. தொடர்ந்து அவைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள்  போராடி வருகின்றன. 

இதனிடையே, நாடாளுமன்றத்தின் மாண்பைக் கலங்கப்படுத்தும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதன்மூலம், நடப்பு கூட்டத்தொடர் வரையில் எதிர்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via