திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

by Staff / 01-02-2023 12:02:34pm
 திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண். 12661/12662, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 23.02.2023 முதல் 03.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது. எலக்ட்ரிக்/டீசல் இன்ஜின் மாற்றம் விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெறும்.

ரயில் எண். 16101/16102, சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் 28.02.2023 முதல் 02.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது.

 

Tags :

Share via