2 கிலோ கஞ்சாவுடன் வடமாநிலத்தவர் கைது

by Staff / 04-10-2023 12:32:52pm
2 கிலோ கஞ்சாவுடன் வடமாநிலத்தவர் கைது

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 2 கிலோ கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த குமுதோ சிங் (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தாலப்பாக்கத்தில் ஹார்டுவேர் கடையில் அவர் வேலை செய்து வருவதாகவும், சொந்த ஊர் சென்றுவிட்டு வரும்போது, கஞ்சா வாங்கி வந்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குமுதோ சிங்கை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo