குடும்ப அட்டைகள் ஆய்வு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புதரமான அரிசி வழங்க நடவடிக்கை

by Editor / 25-08-2021 03:15:45pm
குடும்ப அட்டைகள் ஆய்வு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புதரமான அரிசி வழங்க நடவடிக்கை

குடும்ப அட்டைகளை ஆய்வு செய்து சரியான நபருக்கு சரியான குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தமிழக சட்டசபையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், தமிழகத்தில் ஐந்து வகை ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என நானும் கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் பேசும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டேன். ஆனால் பதில் இல்லை. தனியார் அமைப்பு ஒன்று இந்த ஆய்வு செய்ததாக தெரிகிறது. ஆனால் அதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. தேவையானவர்களுக்கு தேவையுள்ள காடுகள் வழங்கப்படவில்லை. அதை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார

இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார்.முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் எங்களை ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து குடும்ப அட்டையில் உள்ள பிரச்சினைகளை முற்றிலும் சரி செய்ய ஆலோசனை கூறியுள்ளார். கண்டிப்பாக உறுப்பினர் கூறிய புகாரை எங்களுக்கும் பலர் கூறியுள்ளனர் அதனால் கண்டிப்பாக ரேஷன் அட்டைகளை ஆய்வு செய்து சரியான நபருக்கு சரியான அட்டைகள் வழங்கப்படும். வழங்கப்படுவது உறுதி என கூறினார்.

மேலும் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, கடந்த கால ஆட்சியில் அரிசி கொள்முதல் செய்து வைத்துள்ளனர். அந்த அரிசியில் சிவப்பு கலர் உள்ளது. தரமானதாக இல்லை என பலரும் கூறுகின்றனர். அதை சரி செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார். நமக்கு அரிசி சப்ளை செய்யும் 376 அரிசி உற்பத்தி ஆலைகளுக்கு கலர் கட்டர் மாற்ற அறிவுறுத்தியுள்ளோம். அரசு சார்பில் 21 அரிசி ஆலைகள் உள்ளன. அவற்றிற்கும் கலர் கட்டர் மாற்ற உத்தரவிட்டுள்ளோம். இதனால் இனிமேல் தரமான அரிசி கண்டிப்பாக மக்களுக்கு கிடைக்கும் என கூறினார்.

 

Tags :

Share via