முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த ஆண்டு தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு வெளியே நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இம்ரான் கானுக்கு மார்ச் 3ம் தேதி வரை பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது நீதிபதி அலி பக்கார் நஜாபி தலைமையிலான 2 பேர் அமர்வு. இந்த வழக்கில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய இம்ரான் கானின் மனுவை இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
Tags :