காயம்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவம் படிக்காத மருத்துவமனைஉரிமையாளர்கைது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள பண்பொழி திருமலை கோவில் அடிவாரப் பகுதியில் தனியார் தோட்டத்தின் உடைய காவலாளியாக இருப்பவர் பரமசிவன் -காளியம்மாள் தம்பதியினர் இவர்களுடைய பத்து வயது மகன் கவுசிக். இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் 7ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் உலாவந்த கௌஷிக் திடீரென கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.இதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் சூர்யா மருத்துவமனைக்கு கௌஷிக்கை அவரது உறவினர் பூவையா அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். தலைப்பகுதியில் சுத்தம் செய்யப்படாமல் 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மறுநாள் எட்டாம் தேதி கடுமையான வலியில் துடித்த சிறுவனை அவரது தாய் காளியம்மாள் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார் அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தலையில் பட்ட காயத்திற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் தலையில் பட்ட காயத்தின் பகுதி புண் ஏற்பட்டு சீழ் வடிந்து பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது. சரியான நேரத்தில் சிறுவனை அழைத்துவந்ததால் அவரது தலையில் இருந்த மண் உள்ளிட்டவைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு மறு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை அவசர சிகிச்சைபிரிவில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் . இது குறித்து அவரது தாயார் தெரிவிக்கும் பொழுது பண்பொழியில் உள்ள அந்த மருத்துவமனையில் காயம்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யப்படாமல் வலிக்கு எந்த விதமான ஊசி உள்ளிட்டவைகள் செலுத்தாமல் முறையான சிகிச்சையளிக்காமல் அவசர கதியில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்தார்.இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத்தொடர்ந்து அவரது உத்தரவுப்படி இன்று இரவு 7 மணியளவில் தென்காசி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணைஇயக்குனர் பிரேமலதா தலைமையில் மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர்ஜெஸ்லின் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது அந்தமருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் திருநெல்வேலியை சேர்ந்த அரசு மருத்துவர் பாபு என்பவரது பெயரில் செயல்பட்டுவரும் இந்தமருத்துவமனையில் கட்டிடத்தின் உரிமையாளர் கேரளமாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரது மகன் அமீர் ஜலால் மருத்துவம் பார்த்துவருவதையம் கண்டறிந்தனர்.மருத்துவ அதிகாரிகள் குழுவினர் சோதனைக்கு சென்றபோது முதியவர் ஒருவருக்கு சிகிச்சையளித்ததையும் கண்டறிந்து அவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்தத்தைத்தொடர்ந்து அச்சன்புதூர் காவல்நிலையத்தில் சுகாதாரப்பணிகள் இணைஇயக்குனர் புகார் அளித்தார் புகாரைத்தொடர்ந்து அச்சன்புதூர் போலீசார் அவரை கைதுசெய்தனர்.17 ஆண்டுகாலமாக இவர் மருத்துவம் பார்த்தது தற்போது தெரியவந்துள்ளது.
Tags : காயம்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவம் படிக்காத மருத்துவமனைஉரிமையாளர்.கைது.