தமிழ்நாட்டில் 221 பேருக்கு கொரோனா

by Editor / 06-06-2025 12:09:40pm
தமிழ்நாட்டில் 221 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 489 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர், பஞ்சாப், கர்நாடகாவில் தலா ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 55 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று 8 பேருக்கு கொரேனா கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 221ஆக உள்ளது.

 

Tags :

Share via