வாய்க்காலில் கவிழ்ந்த பள்ளி வேன்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இன்று பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு அதிவேகமாக வந்த வேன் வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கி படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களை மீட்டு ஆக்கூர் அரசு மருத்துவமனைக்கும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். வாய்க்காலில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags :