50பயணிகளோடு சென்று 30பயணிகளோடு வந்த செரியா பாணி கப்பல்.
40 ஆண்டுகளுக்கு பிறகு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி மூலமாக கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகை துறைமுகத்தில் நடைப்பெற்ற தொடக்க விழா நிகழ்வில் மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ. வேலு, சட்டத்தைறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கொடியசைத்து கப்பலை வழி அனுப்பி வைத்தனர். நாகையில் இருந்து 50 பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்தனர். நாகை துறைமுகத்தில் இருந்து காலை 8;15 மணிக்கு புறப்பட்ட கப்பல் 4 மணி நேரம் பயணித்து 12;15 மணிக்கு காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. இலங்கைக்கு சென்ற செரியா பாணி கப்பல் மற்றும் தமிழக பயணிகளை இலங்கை கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீ பாடலி சில்வா மற்றும் யாழ்பாணம் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து நாகைக்கு செரியாபாணி மீண்டும் காங்கேசன் துறைமுகத்திலிருந்து 1;15 க்கு புறப்பட்டு 5 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது அதில் இலங்கை பயணிகள் 30 பேர் பயணம் செய்து நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்தனர்.
Tags : 50பயணிகளோடு சென்று 30பயணிகளோடு வந்த செரியா பாணி கப்பல்.