விஷம் குடித்து கல்லூரி மாணவி பலி

by Staff / 04-12-2023 05:15:14pm
விஷம் குடித்து கல்லூரி மாணவி பலி

அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையத்தை சேர்ந்த தங்கராசு மகள் பிரதீபா(18). இவர் கவுந்தப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பிரதீபா அடிக்கடி செல்போனில் விளையாடி வந்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்‌. இதனால் மன வேதனையடைந்த பிரதீபா விஷம் குடித்தார். பெருந்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரதீபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்‌. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo