முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமித் ஷா ஆலோசனை
சென்னையில் மிக்ஜாம் புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப் படைகளை அனுப்ப உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தேவையான உதவிகளை வழங்கத் தயார் என அமித் ஷா உறுதி அளித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி மற்றும் போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags :