உம்ரா யாத்திரைக்காக சென்ற 42 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு-தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இரங்கல்
இன்று அதிகாலை மக்காவில் இருந்து மதினா செல்லும் வழியில் உம்ரா யாத்திரைக்காக ஹைதராபாத்தில் இருந்து சென்ற 42 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
.மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த யாத்ரீகர் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்
Tags :



















