பெண் காவல் ஆய்வாளர் ஆடியோவால் சர்ச்சை.
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக நீடாமங்கலம் காவல் நிலையத்திலிருந்து பணி மாறுதல் பெற்று வந்துள்ள சந்தான மேரி என்கிற காவல் ஆய்வாளர் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் அவர் சைக்கோ நபர் ஒருவர் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கி உள்ளது.குற்றவாளியை பிடித்து பொதுமக்களின்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல் ஆய்வாளரே குற்றவாளி குறித்து பேசி வெளியிட்டுள்ள ஆடியோ பொதுமக்களிடையே வைரலாக பரவி பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆடியோவில் அவர் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கருப்பு பேண்ட் கருப்பு டீ சர்ட் அணிந்த நபர் ஒருவர் சுற்றி வருதாகவும் அவர் கையில் வைத்திருக்கும் பாலிதீன் பையில்வயில் கத்தி வைத்திருப்பதாகவும் தனியாக யாராவது மாட்டினால் கழுத்தை அறுத்து விடுவதாகவும் இவர் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பொதக்குடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் நேற்று இரவு திருவாரூர் நகர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்து விட்டதாகவும் .இவரை பற்றி தகவல் தெரிந்தால் திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும் எனவும் சிசிடிவி காட்சி புகைப்படங்களுடன் இவர் பதிவிட்ட ஆடியோ பெரும் பரபரப்பையும் பொதுமக்களியே பீதியையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : பெண் காவல் ஆய்வாளர் ஆடியோவால் சர்ச்சை.



















