மன்சூர் அலிகான் நாளை காலை ஆஜராக உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகான் நாளை காலை சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய மகளிர் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் தனலட்சுமி, நுங்கம்பாக்கத்தில் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்று சம்மன் வழங்கியுள்ளார். மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் மன்சூர் அலிகான் நாளை காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டது.
Tags :