ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி

by Staff / 01-02-2023 05:25:03pm
ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் இபிஎஸ் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஓபிஎஸ், தனது தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளார். செந்தில் முருகன் என்பவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் எங்களின் வேட்பாளரை திரும்ப பெறுவோம் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், என்றைக்கும் இரட்டை இலை முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன். ஒருவேளை இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டு சுயேட்சை சின்னம் கிடைத்தாலும் போட்டியிட தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளோம், இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு வரும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via