காட்டுக்குள் அத்துமீறி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற சீமான் மீது வழக்கு.

வனப்பகுதிக்குள் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்கு வனத்துறையினர் தடை செய்யப்பட்டுள்ளது கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாட்டின மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் இன்று நடைபெற்றது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி செல்லும் சாலையில் சுமார் 1000 நாட்டு இன மாடுகளை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை மேய்ச்சலுக்காக சீமான் உள்ளிட்ட ஆறு பேர் அழைத்துச் சென்றனர் அப்பொழுது சீமானை வனத்துறை அலுவலர் நாகராஜன் அன்பரசன் உள்ளிட்ட தடுத்து மலைமேல் மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர் இதனால் சீமான் மற்றும் வனத்துறையினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனை அடுத்து தடையை மீறி சீமான் விவசாயிகளோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டிய மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார் இது தொடர்பாக வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : காட்டுக்குள் அத்துமீறி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற சீமான் மீது வழக்கு.