விபத்தில் சிக்கி இருந்த குடும்பத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  நயினார் நாகேந்திரன்.

by Staff / 03-08-2025 09:42:55pm
விபத்தில் சிக்கி இருந்த குடும்பத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  நயினார் நாகேந்திரன்.

திருநெல்வேலி கோவில்பட்டி இடையே நான்கு வழிச்சாலையில் கட்டாரங்குளம் பகுதியில் ஒரு கார் மத்திய சாலை தடுப்பில் மோதிவிபத்துக்குள்ளானது இதில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் படுகாயம் அடைந்தார்.அவர்களது குடும்பத்தினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.இதனிடையே தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியை ஈரோட்டில்  முடித்துக் கொண்டு திருநெல்வேலி க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சாலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர்களை கண்டஅவர் தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்ததோடு அவர்களுக்கு தேவையான முதலுதவி செய்தார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதாரக்கு தாமதமானதால் ஒரு  ஆட்டோவை வரவழைத்து காயம்பட்டவர்களை  கேரவில் பட்டி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு திருநெல்வேலிக்கு  திரும்பினார். பாஜக மாநில தலைவரை அடையாளம் கண்டு கொண்ட முதியவர் அவருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார்.

 

Tags : விபத்தில் சிக்கி இருந்த குடும்பத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  நயினார் நாகேந்திரன்.

Share via

More stories