மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை- இந்திய வானிலை மையம்

by Editor / 03-09-2022 09:32:06am
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை- இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் லேசான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 4,5-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர் , நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது.

செப்டம்பர் 6ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தென்காசி, மதுரை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

 

Tags :

Share via