தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முதன்மை அதிகாரிகள் சோதனை
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சென்னையில் பெரம்பூர்,மணலி,மண்ணடி,புதுப்பேட்டை.ஜமாலியா உள்ளிட்ட ஐந்துஇடங்களிலும் கோவையில் கோட்டைமேடு,உக்கடம்,பொன்விழாநகர் உள்ளிட்ட இருபது இடங்களிலும்மயிலாடுதுறை,சீர்காழி,திருமுல்லைவாசல் பகுதிகள் அடங்கி 45இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இத்துடன் சென்னை காவல் துறைக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்படிஐ.எஸ்.ஐ.எஸ் த டைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய எம்.கே.பி.நகர்,ஒட்டேரி,மண்ணடி சேர்ந்த சாதிக்அலி,சலாவுதின் வீடுகளில் சோதனையிட்டு வருவதோடு,ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிலிருக்கும் 18பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.சென்னை மாநகர காவல் துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :