இ.பி.எஸ்-ஒ.பி.எஸ்ஸை தனித்தனியே சந்தித்த அண்ணாமலை
ஈ்ரோடு கிழக்குச்சட்ட மன்ற இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில்,இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் பசுமைவெளிசாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்று ஆலோசனை நடத்தினார்.பின்னர் அங்கிருந்து ஒ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.தேசிய ஜனநாயக கூட்டணி யிலுள்ள அ.தி.மு.க ஒ.பி.எஸ.,இ.பி.எஸ் தலைமையில் அணிகளாகப்பிரிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் ,ஈரோடு கிழக்குத்தொகுதியில் தேசிய கட்சியானகாங்கிரஸ் போட்டியிடுவதால் கூட்டணிக்கு பாதிப்பு நிகழ்ந்துவிடும் என்பதாலும் இரு அணிகளிலும் ஒன்றானால்தான் வரும் 24 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முடியும் என்கிறகருத்தின் அடிப்படையில் இவ்வாலோசனை நிகழ்ந்துள்ளதாக தகவல்.இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்த எடப்பாடி அணி வேட்டாளர் வரும் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வாரென்றும் ஈரோடு கிழக்கில் பா.ஜ.க நின்றால்
தம் அணி வேட்பாளர் வாபஸ் பெறுவர் என்று ஒ.பி.எஸ் தரப்பு கூறியிருப்பது குறிப்பிடத்க்கது.
Tags :