ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் பலி

by Staff / 31-07-2024 02:03:15pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் பலி

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்றுஅதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியை பூர்வீகமாகக் கொண்ட அவர்கள், முண்டக்கையில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தனித்தீவாக மாறிய அப்பகுதியில் இன்று காலை மீட்புப்பணி தொடங்கியபோது, அவர்களது உடல் கண்டெடுக்கப்பட்டது. அங்கு மேலும் பல தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo