தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று 

by Editor / 25-02-2025 09:55:07am
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று 

தமிழ்நாடு பட்ஜெட், மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள், மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனை ஒட்டி, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால், புதிய அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று 

Share via