கட்டப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

by Staff / 30-05-2022 01:22:49pm
கட்டப்பையில்  அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

கடலூர் அருகே கட்ட பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட போலீசார் தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கட்ட பையிலிருந்து உள்ளது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பச்சிளம் குழந்தை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo