நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு ரூ.13 கோடியில் கூடுதல் கட்டிடம்

by Editor / 10-07-2021 05:22:50pm
நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு ரூ.13 கோடியில் கூடுதல் கட்டிடம்

நெல்லை ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல்நாட்டுவிழா நடைபெற்றது. இதில் மீன்வளம் , மீனவர் நலன்  மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார் .

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  சேலத்தில் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அளவில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி அறிவியல் கூடம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியாக ஆய்வு செய்துள்ளேன் , விவசாயத்துடன் இணைந்ததுதான் கால்நடை வளர்ப்பு எனவே கிராமப்புற மாணவர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக்  கல்லூரிகள் இந்தாண்டு அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.. கால்நடை பராமரிப்புத்துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளது. விரைவில் அதனை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழகம் முழுவதும் ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள அம்மை நோயை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. என தெரிவித்தார்

 

Tags :

Share via