லாரி மோதி தலை நசுங்கி பலி

பேராவூரணி அருகே சித்தாதிக்காடு கிராமத்தில் லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பேராவூரணி அருகே தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த ஜோதிலிங்கம் மகன் அண்ணாதாசன்(40), இவர் தனியார் லாட்ஜில் வேலை பார்த்து வந்தார். அண்ணாதாசன் சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள உறவினரின் திருமணத்திற்காக இரவில் வந்த போது பேராவூரணி - அறந்தாங்கி ரோட்டில் பேராவூரணியை நோக்கி வந்த பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரை சேர்ந்த லாரி அண்ணாதாசனின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் அண்ணாதாசன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags :