பிஸ்கட்டில் புழு.. பெண்ணுக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு

மும்பையில் பெண் ஒருவர் பிரிட்டானியா பிஸ்கட் வாங்கியுள்ளார். அதனை சாப்பிடும்போது ஒரு பிஸ்கட்டில் உயிருடன் புழு ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் அப்பெண் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரிட்டானியாவும், கடை உரிமையாளரும் இணைந்து ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு செலவாக ரூ.25,000 வழங்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
Tags :