ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 5 பேருக்கு போலீஸ் காவல்

by Editor / 05-08-2024 03:33:07pm
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 5 பேருக்கு போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு. ஹரிதரன். சிவசக்தி ஆகியோரை காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேரையும் ஏழு நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories