சேலத்தில் கொரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பும் உயிரிழப்புக்கு காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரேநாளில் தேசிய அளவில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags :