தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவை சேர்ந்த சுடலைராஜ் என்பவரின் மனைவியான மகாலட்சுமி என்பவரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது அச்சன்புதூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 05 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.