வெள்ளத்தடுப்பு பணி: சென்னையில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், மண்டல வாரியாக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை சாா்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இப்பணிகளைக் கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
மணலி ஏ.கே.கமல்கிஷோர், மாதவரம் பி.கணேசன், திருவொற்றியூர் சந்தீப் நந்தூரி, தண்டையார்பேட்டை டி.ஜி.வினய், ராயபுரம் மகேஸ்வரி ரவிக்குமார், திரு.வி.க.நகர் நர்ணவரே மனீஷ் சங்கர்ராவ், அம்பத்தூர் எஸ்.சுரேஷ்குமார், அண்ணா நகர் எஸ்.பழனிசாமி, தேனாம்பேட்டை கே.ராஜாமணி, கோடம்பாக்கம் எம்.விஜயலட்சுமி, வளசரவாக்கம் சங்கர்லால் குமாவத், ஆலந்தூர் எல்.நிர்மல்ராஜ், அடையாறு எஸ்.மலர்விழி, பெருங்குடி ஏ.சிவஞானம், சோழிங்கநல்லூர் வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags :