ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு வசதி கடன் உயர்வு

by Editor / 17-08-2021 05:31:30pm
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வீட்டு வசதி கடன் உயர்வு

 

ரெப்கோ வங்கியின் சார்பு நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ், வீட்டு வசதி துறை தேக்க நிலையில் இருந்தாலும் வீடுகளுக்கு கடன் வழங்கி, வசூல் செய்வதில் சிறந்து விளங்கி உள்ளது. இதன் லாபம் முதல் காலாண்டில் ரூ.32.1 கோடியாக உள்ளது. ரூ.201.2 கோடிக்கு கடன் அனுமதித்தது. ரூ. 551.7 கோடிக்கு கடன் வழங்கியது. ரூ.239.7 கோடியாக உள்ளது என்று இதன் நிர்வாக இயக்குனர் யஷ்பால் குப்தா தெரிவித்தார்.


மொத்த வீட்டு வசதி கடன் அளவு ரூ.11 ஆயிரத்து 985.5 கோடி 2021 ஜூன் மாத முடிவில் உள்ளது. இதில் சுயவேலை பிரிவினருக்கு வழங்கிய கடன் 51.5% ஆக உள்ளது. 153 கிளைகள், 24 தொலைதூர மையங்கள் உள்ளது என்றார் அவர்.


வீட்டு மனை வாங்க, வீட்டு அடமானக் கடன், வீடு மற்றும் அடுக்குமாடிக் கட்டிடம் வாங்க /கட்ட, வீடு பழுது பார்க்க/விஸ்தரிக்க, பிற வங்கி/ நிதி நிறுவனத்தில் நிலுவையில் உள்ள வீட்டு வசதி கடனை மாற்றி கூடுதல் தொகையை பெற, வணிக வளாகம் வாங்க/கட்ட, என்ஆர்ஐ லோன் ஆகியவைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.


சம்பளம் பெறுபவர், வெளிநாட்டு இந்தியர், சுயதொழில் செய்பவர், தொழிலதிபர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.

 

Tags :

Share via