கூலித் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

by Staff / 31-03-2023 05:24:14pm
கூலித் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.நேற்று வாழவந்தி அருகே உள்ள கே. புதுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் தூக்குப் போட்டு கொண்டார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via