வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை பலி

by Staff / 31-03-2023 05:19:39pm
வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொதிக்கும் தண்ணீர் வைத்திருந்த வாளியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது. பிரணதி, பிரேம்குமார் தம்பதி, தங்களின் 8 மாத குழந்தை பிரக்யாவுடன் லம்பாடிப்பேட்டையில் வசித்து வருகின்றனர். இம்மாதம் 27ஆம் தேதி, குழந்தையின் படுக்கைக்கு அருகில் உள்ள வாளியில் தண்ணீர் சூடாக்கிக் கொண்டு தாய் வெளியே சென்றுள்ளார். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், குழந்தை வெந்நீர் வாளியில் கிடப்பதைப் பார்த்து பதறிப்போனார். உடல் முழுவதும் படுகாயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
 

 

Tags :

Share via

More stories