காசா பகுதிகளில் பசியும் பட்டினிமாக மக்கள் தவித்து வருகின்ற சூழல்

by Admin / 31-05-2025 10:24:55am
காசா பகுதிகளில் பசியும் பட்டினிமாக மக்கள் தவித்து வருகின்ற சூழல்

காசா பகுதிகளில் பசியும் பட்டினிமாக மக்கள் தவித்து வருகின்ற சூழல் உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட ரெண்டு புள்ளி மூணு மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் அனைத்து மக்களும் பசியின் கோர பிடிக்குள் வசப்பட்டு உள்ள நிலை தொடர்கிறது.. மனிதாபிமான முறையில் உதவக்கூடிய சூழலை கூட இஸ்ரேலியராணுவம் தடுத்து வருவதாகவும் தொடர்ந்து மக்கள் மீதும் கட்டிடங்கள் மீதும் குண்டுகளை வீசி வருவதும் தொடர்கதையாகி உள்ளது.. காசா பகுதி மக்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் உதவிகள் ஒரு முழுமையானதாக இல்லாமல் யானை பசிக்கு சோள பொரி என்பதாக உள்ளதாக ஐநா போன்ற அமைப்புக்கள் கூறி வருகின்றன. எங்கு பார்த்தாலும் பசியின் பூக்குரலும் குண்டுகளின் சத்தம் தான் காசா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சிதறப்பட்டு கிடக்கும் கட்டட கோர காட்சி ,பசியின் கொடுமை தொடர்ந்து போரினால் சமூகம் எப்படி விழுந்து போகும் என்பதற்கு சாட்சியாக உள்ளன.

காசா பகுதிகளில் பசியும் பட்டினிமாக மக்கள் தவித்து வருகின்ற சூழல்
 

Tags :

Share via