குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக 7வது நாளாக குளிப்பதற்கு தொடரும் தடை.

by Editor / 31-05-2025 10:20:46am
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக 7வது நாளாக குளிப்பதற்கு தொடரும் தடை.

தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக குற்றாலம் பிரதான் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி சிற்றருவி புலியருவி,  உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 7வது நாளாக வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. கோடை விடுமுறை காலத்தில் கோட்டு மாதிரி குடிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பெய்யும் காலங்களை குற்றாலத்தில் சீசன் காலமாகும் ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை கைய தொடங்கியதால் குற்றால அருவிகளின் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்  வியாபாரிகள் மற்றும் குற்றாலம் பகுதிகளை நம்பி உள்ள விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக 7வது நாளாக குளிப்பதற்கு தொடரும் தடை.

Share via