43 நாட்களாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் 43 நாட்களுக்கு பிறகு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும், மார்ச் 15இல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து நாள்தோறும் துறை சார்ந்த மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. இறுதி நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகிறார்.2 அமைச்சர்கள் ராஜினாமாவோடு 3 அமைச்சர்கள் புதிய பொறுப்புக்களோடும்,புதியதாக ஒரு அமைச்சர் பொறுப்புஏற்போடும் 43 நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக்கூட்டத்தொடர் இன்று 29 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
Tags : 43 நாட்களாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..