மேற்கு வங்காளத்தின் ஆளுநராக கேரளாவைச் சேர்ந்த சி.வி. ஆனந்த போஸ் இன்று பதவியேற்பு!

by Editor / 23-11-2022 07:45:02am
மேற்கு வங்காளத்தின் ஆளுநராக கேரளாவைச் சேர்ந்த  சி.வி. ஆனந்த போஸ் இன்று பதவியேற்பு!

மேற்கு வங்காளத்தின் ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக சி.வி. ஆனந்த போஸ் நியமிக்கப்படுவதாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு அறிவித்தார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பொறுப்பேற்கவுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories