மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை .பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதின் காரணமாக புயலாக மாற உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை நாகை திருவாரூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதோடு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . விழுப்புரம் ,கடலூர், அரியலூர் ,தஞ்சை, புதுக்கோட்டை ,சிவகங்கை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மிக கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதாகவும் கனமழையானது வரும் வரும் 30-ஆம் தேதி வரை தமிழக தென்பகுதி டெல்டா மாவட்ட கடற்கரையோரம் மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ,காரைக்கால், கடலூர், மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை செங்கல்பட்டு பள்ளி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தன்மையை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே விடுமுறை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags :