பக்ரீத் பண்டிகை ஆடுகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி. 

by Editor / 31-05-2025 10:11:53am
பக்ரீத் பண்டிகை ஆடுகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி. 

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்க மணப்பாறை, திருச்சியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் அதிக விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags : பக்ரீத் பண்டிகை ஆடுகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி. 

Share via