தென்காசி:ஒரே நாளில் மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையபகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ஊத்தங்குளம் ஆதிமூலம் @ தங்கதுரை என்பவரின் மகன் தினேஷ்(25), கீழக்கலங்கள் கீழத் தெருவை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரின் மகன் சிவசக்தி ஆகியோரும், செங்கோட்டை காவல் நிலையபகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான மேலூர் செங்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் முஸ்தபா கமால் (33) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி மூன்று நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்..
Tags : ஒரே நாளில் மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.