.பொது மக்களிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா தாமதமாக வந்ததற்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கோரிக்கை மனுக்களையும் வழங்கினர். இதனால், விழாவிற்கு செல்ல தாமதமானது. இதையடுத்து, விழா மேடையில் ஏறியதும் அவர், தாமதமாக வந்ததற்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
Tags :