இன்று துபாய் விமான கண்காட்சியின் போது இந்திய விமானப்படையின்தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது
இன்று துபாய் விமான கண்காட்சியின் போது இந்திய விமானப்படையின்தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.. தரையில் விழுந்து தீ பிடித்து எரிந்தது .இதில் விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். விமானி உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தி உள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய இந்திய விமானப்படை ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.. இந்திய விமானப்படை மற்றும் இந்திய அரசு உயிரிழந்த விமானியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.. இது தேஜாஸ் போர் விமானம் இரண்டாவது விபத்தாகும்.. 2024 மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடந்த ஒரு ஒரு பயிற்சியின் போது விமானம் விபத்திற்கு உள்ளானது. ஆனால் விமானி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
Tags :



















