வங்கதேசத்தில் மேலும் ஓா் இந்து வாலிபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவான இரண்டாவது சம்பவமாகும் இது. அண்மைக் காலங்களாக அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 40 வயதான மளிகைக் கடை உரிமையாளர் சரத் சக்ரவர்த்தி மணி, திங்கள்கிழமை இரவு நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள தனது கடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கள்கிழமை அதிகாலை, பத்திரிகையாளரும், ஐஸ் தொழிற்சாலை உரிமையாளருமான ராணா பிரதாப் பைராகி (38 வயது), ஜெஸ்ஸூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 18 நாட்களில் மட்டும் வங்கதேசத்தில் ஆறு இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய சூழலில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்து சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் அங்குள்ள மக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகம் முழுவதும் உள்ளவர்களிடையே எழுந்துள்ளது. இது போன்ற வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Tags :



















