திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்- உறுதி செய்தது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு

by Admin / 06-01-2026 03:16:18pm
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்-  உறுதி செய்தது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு

இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படுவதற்கு கோயில் நிர்வாகம் மறுத்ததை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் இந்து அமைப்பினர். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். இவ் வழக்கு தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் டிசம்பர் 2025 இல் திருப்பரங்குன்ற மலை மீது இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகமும் தர்கா அமைப்பினரும் மேல் முறையீடு செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பில் தீபம் ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இந்து அமைப்பினர் மலை மீது உள்ள தீபத் தூணில் மட்டுமே தீபம் ஏற்றுவோம் என்று வாதத்தை வைத்தனர். இந்நிலையில் பிரச்சனை மேலும் தொடராமல் இருக்க காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இவ் வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் கே கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூண் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமானது என்றும் அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற தமிழக அரசின் வாதத்தை கற்பனையான பூதம் என்று கூறி நீதிமன்றம் நிராகரித்தது. தீபம் ஏற்றும் போது பொது மக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபத் தூண் உள்ள பகுதி தர்காவிற்கு  சொந்தமானது என்கிற வாதத்தை நீதிபதிகள் அபத்தமானது என்றும் வர்ணித்ததோடு தீபம் ஏற்றுகிற விஷயத்தில் அரசு அரசியல் செய்துள்ளதாகவும் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பாராளுமன்றம் வரை இந்த தீபத் தூணில் தீபம் ஏற்றுகிற பிரச்சனை தொடர்ந்து நிகழ்ந்ததற்கு இன்று நீதிமன்றம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

மத்திய அமைச்சரும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளருமான பியூஸ் கோயலும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் இது குறித்து இருதரப்பும் விளக்கம் அளித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories