கல்வெட்டில் பெயர் போட்டுக் கொண்டால்... அதிமுகவுக்கு பொதுச் செயலாளர் ஆக முடியுமா? ஜெயக்குமார்

by Editor / 17-10-2021 03:58:43pm
கல்வெட்டில் பெயர் போட்டுக் கொண்டால்... அதிமுகவுக்கு பொதுச் செயலாளர் ஆக முடியுமா?  ஜெயக்குமார்

கல்வெட்டில் பெயர் போட்டுக் கொண்டால் அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் யெலாளராகி விட முடியுமா? என்று ஜெயக்குமார் கட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், அண்ணா தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. அண்ணா தி.மு.க.வில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அண்ணா தி.மு.க. கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது.

சிறையில் இருந்து வந்து 8 மாதத்திற்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது ஏன்? இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன்விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்? இனி அடுத்த ஆண்டு தான் வருவார்.

புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்? எம்.ஜி.ஆர் தான் புரட்சித்தலைவர், ஜெயலலிதா தான் புரட்சித்தலைவி. அண்ணா தி.மு.க. பொன்விழா எழுச்சியுடன் நடைபெறுவது சசிகலாவிற்கு பிடிக்கவில்லை. கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகிவிட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

 

Tags :

Share via